ஐசிசி டி 20 உலகக் கோப்பை - சூப்பர் 12 சுற்றில் முதலில் நுழைந்தது வங்கதேச அணி :

By செய்திப்பிரிவு

ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரின் முதற்கட்ட சுற்றில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

ஓமனின் அல் அமரத் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. கேப்டன் மஹ்மதுல்லா 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் ஷகிப் அல் ஹசன் 37 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 46 ரன்களும் விளாசினர். லிட்டன் தாஸ் 29, அஃபிப் ஹொசைன் 21,மொகமது சைஃபுதீன் 19 ரன்கள் சேர்த்தனர். பப்புவா நியூ கினியா சார்பில் கபுவா மோரியா, டேமியன்ராவு, அசாத் வாலா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

182 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பப்புவா நியூ கினியா 19.3ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிப்லின் தோரிகா 46, ஷாத் சோபர் 11 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணிசார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்களும், மொகமது சைஃபுதீன், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி2-வது வெற்றியை பதிவு செய்ததுடன் 1.733 நெட் ரன் ரேட்டுடன் 4 புள்ளிகள் பெற்று பி பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.

ஆட்ட நாயகனாக ஷகிப் அல் ஹசன் தேர்வானார். வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து 2-வது ஆட்டத்தில் ஓமனை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்அயர்லாந்து - நமீபியா

நேரம்: பிற்பகல் 3.30

இடம்: ஷார்ஜாநெதர்லாந்து - இலங்கை

நேரம்: இரவு 7.30

இடம்: ஷார்ஜாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்