கடந்த வருடம் ஜூன் மாதம் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மாவும் யுவராஜ் சிங்கும் இன்ஸ்டகிராமில் நேரலையில் உரையாடல் நிகழ்த்தினார்கள். அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹலின் டிக்டாக் ஆர்வம் பற்றி இருவரும் பேசினார்கள். அப்போது யுவேந்திர சாஹல் சாதி குறித்து யுவராஜ் சிங் அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, ரஜத் கன்சால் என்பவரின் புகாரின் பேரில் யுவராஜ் சிங் மீது கடந்த பிப். 14-ல் ஹரியாணா போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் யுவராஜ் சிங் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கன்சால் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago