உத்தராகண்டில் பெய்து வரும் கனமழையால் - சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

உத்தராகண்டில் பெய்து வரும் கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உத்தராண்ட் மாநிலத்தில் உள்ள இந்துக் களின் புனிதத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களுக்கு செல்லும் யாத்திரைக்கு சார்தாம்யாத்திரை என்று பெயர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வர்.

இந்நிலையில் அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 20-ம் தேதிவரை மாநிலத்தில் மிக கனமழை தொடரும்என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மலைப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சார்தாம் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 4 தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் ஆங்காங்கே தங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கேதார்நாத் செல்ல விருத்த சுமார் 4,000 பக்தர்கள் லினசாலி மற்றும் பிம்பாலி ஆகிய இடங்களல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக ருத்ரபிரயாக் பேரிடர் நிர்வாக அதிகாரி என்.எஸ். சிங் தெரிவித்தார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்