டி 20 உலகக் கோப்பை தொடர் ஓமனில் இன்று தொடக்கம் : இந்தியா - பாகிஸ்தான் 24-ல் பலப்பரீட்சை

By செய்திப்பிரிவு

ஆடவருக்கான 7-வது ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஓமனில் இன்று தொடங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இன்று (17-ம் தேதி) தொடங்கி வரும் நவம்பர் 14 வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் முதல் சுற்றில்8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, நமீபியா அணிகளும் ‘பி’ பிரிவில் ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசத்தை சந்திக்கிறது. முதல்சுற்று ஆட்டங்கள் 22-ம் தேதி வரைநடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சூப்பர் 12 சுற்று 23-ம்தேதி தொடங்குகிறது. இந்த சுற்றில்குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 24-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்