இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர பயிற்சியாளராக செயல்பட ராகுல் திராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐபிஎல் டி 20 தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று முன்தினம்நடைபெற்றது. அப்போது ராகுல் திராவிட்டுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து முழுநேர பயிற்சியாளராக செயல்பட ராகுல் திராவிட் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறும் டி 20உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் திராவிட் பயிற்சியாளர் பொறுப்பேற்பார் என எதிர் பார்க்கப் படுகிறது. இதுபோல பராஸ் மாம்ப்ரே பந்து வீச்சுபயிற்சியாளராக நியமிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago