தேசிய புட்சால் போட்டியில் சென்னை அணிக்கு பட்டம் :

By செய்திப்பிரிவு

தேசிய புட்சால் சாம்பியன்ஷிப் போட்டி தர்மபுரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கவிராஜ் மற்றும் இளந்தமிழன் ஆகியோரது பயிற்சியின் கீழ் 15 பேர் கொண்ட சென்னை அணி பங்கேற்றது.

லீக் சுற்றில் மும்பை, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, புனே ஆகிய அணிகளை வென்று அரை இறுதிக்கு சென்னை அணி தகுதி பெற்றது. அரை இறுதி போட்டியில் கர்நாடக அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை அணி.

தொடர்ந்து இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சென்னை அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. சென்னை அணி கோல் கீப்பர் ராகுல் கண்ணன் தொடரின் சிறந்த கோல் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் சென்னை அணியை சேர்ந்த 5 வீரர்கள், இந்திய புட்சால் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த அணி அடுத்த மாதம் பராகுவேயில் நடைபெற உள்ள சி-15 உலகக் கோப்பையில் விளையாடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்