இந்த ஆண்டு பொருளாதாரத் துக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க பொருளாதார அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டேவிட் கார்ட், ஜோஷ்வா டி. ஆங்ரிஸ்ட், குய்டோ டபிள்யூ.இம்பென்ஸ் ஆகியோர் கூட்டாக இவ்விருதைப் பெறுகின்றனர்.
நடைமுறை வாழ்க்கையில் இவர்களது பொருளாதார ஆய்வை செயல்படுத்தி சோதித்ததற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நடைமுறை வாழ்வில் பொருளாதார தாக்கம் குறிப்பாக அமெரிக்காவின் துரித உணவு கலாச்சாரம் மற்றும் கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ மேற்கொண்ட கொள்கை முடிவால் ஏற்பட்ட பாதிப்பு, சாதகம் குறித்து இவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
பொதுவாக மருத்துவம் சார்ந்த சோதனைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அதைப்போல கடுமையான சோதனை முறைகளை பொருளாதார ஆய்வுகளின்போது பின்பற்ற முடியாது. இதனால் வழக்கமான நடைமுறை, வாழ்வியல் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பிற சமூக அறிவியல் அணுகுமுறையிலும் பின்பற்றப்படுகிறது.
இவர்களது ஆய்வு முடிவுகள் சில ஸ்திரமான விளக்கங்களை அளித்துள்ளது. இதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதன் பலன்கள் குறித்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளதாக நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பீட்டர் பிரெடெரிக்ஸன் தெரிவித்துள்ளார்.
டேவிட் கார்ட் மேற்கொண்ட பரிசோதனை அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் துரித உணவு துறையில் ஊதிய உயர்வு ஏற்பட வழிவகுத்துள்ளது.
விருதுடன் ஒரு கோடி ஸ்வீடன் குரோனர்கள் (சுமார் 1.14 கோடி டாலர்) பரிசை மூவரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago