ஹெடெரோ பார்மா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.142 கோடிரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.550 கோடி மதிப்பிலான சொத்துகளை கணக்கில் காட்டாதது ம் தெரியவந் துள்ளது.
ஹெடெரோ பார்மா குழு மத்துக்கு சொந்தமாக 6 மாநிலங் களில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தியது. அப்போது இந்த சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்தவிவரம் தொடர்பாக ஹெடெரோபார்மா குழுமம் எவ்வித அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்தசோதனையின்போது பல்வேறு வங்கிகளில் 16 லாக்கர்களை இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.142.87 கோடிரொக்க தொகை கைப்பற்றப் பட்டதாக மத்திய நேரடி வரிகள் ஆணைய (சிபிடிடி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணக்கில் காட்டாத ரூ.550 கோடி
இதுதவிர கணக்கில் காட்டப்பட்டாத ரூ.550 கோடி சொத்து குறித்த விவரங்களும் அதற்குரியஆவணங்களும் கைப்பற்றப்பட் டுள்ளன.வருமான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் வேறெங்கும் உள்ளனவா என்பது குறித்தசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிபிடிடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் பார்மா மூலப்பொருள், கூட்டு சேர்க்கை உள்ளிட்டவை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை பெரும்பாலும் அமெரிக்கா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சில போலியான ஆவணங்கள் மற்றும் புழக்கத்தில் இல்லாத சில நிறுவனங்கள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு உள்ளிட்டவை மற்றும் நிறுவன அதிகாரிகளின் தாராளமான செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் நிலங்களை வாங்கியது தொடர்பாகவும் விசாரணை நடத்தப் படுகிறது.
போலி கணக்குகள்..
அரசு நிர்ணயித்த விலைக்குக் குறைவாக நிலங்களை வாங்கியது தொடர்பான ஆவணங்கள் கைப் பற்றப்பட்டு அது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக போலியாக கணக்கு வழக்குகளை அரசுக்கு தாக்கல் செய்வதற்கென இரண்டாவதாக ஒரு கணக்கு முறையை இந்நிறுவனம் பின்பற்றி அதை செயல்படுத்தி வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆவணங்கள் அனைத்தையும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை டிஜிட்டல் பதிவுகளாக மாற்றப்பட்டு பென்டிரைவ் உள்ளிட்டவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
ஹெடெரோ குழுமம் சமீபத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட பார்மா நிறுவனமாகும். இந்நிறுவனம் ரெம்டெசிவர் மற்றும் பேவிபிரவிர் உள்ளிட்ட மருந்து தயாரிப்புக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. இவை அனைத்தும் கரோனா தடுப்பு மருந்துகளாகும். இந்நிறுவனத்துக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, எகிப்து, மெக்சிகோ, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் 25 உற்பத்தி ஆலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago