நாடு முழுவதும் 28 உயர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இவற்றில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் கடந்த 6, 7, 8-ம் தேதிகளில் கொலிஜியம் குழு கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இதில் சென்னை உட்பட 6 உயர் நீதிமன்றங்களில் 23 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்ய நாராயண பிரசாத்தை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago