ஆப்கன் மசூதியில் தாக்குதல் : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினர் வழிபடும் மசூதியில் நேற்று நிகழ்த்தப்பட்ட பயங்கரவெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்துஅமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி அமைந்தது.ஆனால், தலிபான் ஆட்சியாளர் களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதிகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திவருகின்றனர். இதனால் அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஷியா - சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையிலும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.இந்த சூழலில், வடக்கு ஆப்கானிஸ்தானின் குத்தூஸ் நகரில் உள்ள ஷியா பிரிவினர் வழிபடும் மசூதி ஒன்றில் நேற்று பிற்பகல் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கானோர் மசூதியில் வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பல னின்றி சுமார் 60 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதால் இன்னும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என ஆப்கன் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்