பிலிப்பைன்ஸ், ரஷ்ய பத்திரிகையாளர்கள் - மரியா ரெஸ்ஸா, திமித்ரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு :

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல்பரிசுகள் கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிகையாளர் திமித்ரி முராடோவ்ஆகியோருக்கு அறிவிக்கப்பட் டுள்ளது.

தங்கள் நாட்டில் கருத்து சுதந்திரத்துக்காக போராடியதற்காக இவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நார்வே நோபல் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ் ஆன்டர்சன் கூறும்போது, “கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்காக இருவரும் கவுரவிக்கப்படுகின்றனர். ஜனநாயகத்துக்கும் நீடித்த அமைதிக்கும் கருத்து சுதந்திரம் மிக அவசிய மானது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்