கரோனா தொற்றால் உயிரிழந்த - 2,800 ரயில்வே ஊழியர் குடும்பத்தினருக்கு பணி :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் உயிரிழந்த 2,800-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல்தொடங்கிய 2020-ம் ஆண்டு மார்ச்மாதம் முதல் தற்போது வரை 3,256ரயில்வே ஊழியர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இதுபோல கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வேயில் பணி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, இப்போது வரை வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்த 2,800-க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீதமுள்ளவர்களின் குடும்பத்தினருக்கும் விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்