சென்னையை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி :

By செய்திப்பிரிவு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர் பஞ்சாப் பந்து வீச்சாளர்கள்.

அதிகபட்சமாக டு பிளெஸ்ஸிஸ் 76 ரன்கள் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 15, ருதுராஜ் கெய்க்வாட் 12, தோனி 12 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 135 ரன்கள் இலக்கை 14 ஓவர்களுக்குள் எட்டினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கலாம் என்ற நிலையில் பஞ்சாப் பேட்டிங் செய்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 42 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாச பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்