தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு (73) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோரும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசுவழங்கப்படுகிறது. கடந்த 4-ம் தேதிமுதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக்குர்னாவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. இவர் இதுவரை 10 நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
தான்சானியாவின் சான்சபா தீவைச் சேர்ந்த இவர் கடந்த 1960-ல் அகதியாக பிரிட்டனில் குடியேறினார். இதன் காரணமாக இவரது படைப்புகளில் அகதிகள் அனுபவிக்கும் துயரங்கள், காலனி ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதற்காக இவர் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அப்துல் ரசாக் குர்னா கூறும்போது, "உலகின் மிகப்பெரிய பரிசு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு கிடைத்த நோபல் பரிசைஆப்பிரிக்க மக்களுக்கும் எனதுவாசகர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago