தடுப்பூசி உற்பத்தி : அமெரிக்க அமைச்சர் இந்தியாவுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றுஅவர் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனாவை எதிர்த்து இந்தியா சிறப்பாக போராடியது. கரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு மீ்ண்டும் ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முடிவு பாராட்டத்தக்கது. கரோனா தடுப்பூசிஉற்பத்தி செய்வதில் இந்தியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.

பல்வேறு துறைகளிலும் பரிணாமங்களிலும் இந்தியாவும் அமெரிக்காவும் இன்றியமையாத பங்குதாரர்களாக உள்ளன. இரு நாடுகளும் இணைந்து எத்தகைய சவாலையும் சமாளிக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் ராணுவரீதியாகவும் பரஸ்பரம் ஒத்துழைக்கும் நாடுகளாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்