பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மதத் தலங்களில் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக விசாரணை நடத்தபிரான்ஸ் கத்தோலிக்க தலைமையகம் ஒரு குழு அமைத்தது.
அந்தக் குழு, கடந்த 1950-ம்ஆண்டு முதல் கத்தோலிக்க மையங்களில் சிறுவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் அந்தக் குழு தனது 2,500 பக்க விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 2.16 லட்சம் சிறுவர்கள் கத்தோலிக்க மையங்களில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களில் பாதிரியார்கள், மதகுருக்கள் உட்பட 3,200 பேர் வரை ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.இந்த சம்பவங்களை அறிந்த கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago