மேலும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் கைது :

By செய்திப்பிரிவு

மும்பை கடல் பகுதியில் இருந்த ஒரு சொகுசுக் கப்பலில் கடந்த சனிக்கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்து தெரியவந்தது.

இதையடுத்து, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 8 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கனின் மகன் ஆர்யன் கானும் ஒருவர்.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் அளித்து வரும் வாக்குமூலங்களின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மும்பையின் புறநகர் பகுதியான பவாயைச் சேர்ந்த போதைமருந்து கடத்தல்காரர் நேற்று கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்