ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் - பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய மும்பை, கொல்கத்தா போட்டி :

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு மும்பை, கொல்கத்தா அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

13 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 0.048 ஆக உள்ளது. கொல்கத்தா அணியும் 12 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும் ரன் ரேட் (0.294) அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா தனது கடைசி ஆட்டத்தில் இன்று ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. மும்பை தனது கடைசி ஆட்டத்தில் நாளை ஹைதராபாத்தை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றாலே எளிதாகபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இது நிகழ்ந்தால் மும்பைஅணிக்கு சிக்கல் நேரிடும். கொல்கத்தா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கூட மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி காண வேண்டும். அப்போதுதான் கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை கடந்து பிளே ஆஃப் சுற்றில் நுழைய முடியும்.

ஒருவேளை ராஜஸ்தானிடம் கொல்கத்தா அணி தோல்வியடைந்தால், மும்பை - ஹைதராபாத் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பு தெரியவரும். ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கான வாய்ப்பு என்பது கணக்கீடுகளின்படி ஏறக்குறைய முடிந்துவிட்டது.

இன்றைய ஆட்டம்சென்னை - பஞ்சாப்

நேரம்: பிற்பகல் 3.30

இடம்: துபாய்கொல்கத்தா - ராஜஸ்தான்

நேரம்: இரவு 7.30

இடம்: ஷார்ஜாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்