ஐபிஎல் டி 20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நுழைய - ஒரு இடத்துக்கு 4 அணிகள் இடையே கடும் மோதல் :

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

கடைசி அணியாக தகுதி பெறுவதில் கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகள்இடையே கடும் போட்டி நிலவுகிறது.பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு ஆட்டமும் ராஜஸ்தான், மும்பை அணிகளுக்குத் தலா 2 ஆட்டங்களும் எஞ்சியுள்ளன. எனினும், கொல்கத்தா அணிக்கே 4-வது இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட்டை (0.294) அதிகமாக கொண்டுள்ளது. இதனால் ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி ஆகலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மும்பையும் ராஜஸ்தானும் 12 புள்ளிகளைத் தாண்டாமல் இருக்க வேண்டும். மும்பை தனது அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்று கடைசி ஆட்டத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்தால் நெட் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடும்.

ராஜஸ்தானை பொறுத்தவரை யில் தனது கடைசி இரு ஆட்டங் களிலும் மும்பை, கொல்கத்தா அணிகளை வீழ்த்தினால் 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து விடலாம். ராஜஸ்தான் நிலைமைதான் மும்பைக்கும்.

இன்றைய ஆட்டம்ராஜஸ்தான் - மும்பை

நேரம்: இரவு 7.30

இடம்: ஷார்ஜாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்