வாதா கோலம் அரிசிக்கு புவிசார் குறியீடு :

By செய்திப்பிரிவு

மகாராஸ்டிர மாநிலம் பல்ஹர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வாதா கோலம் அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.

வாதா கோலம் அரசி மிகவும் பிரபலமானது. மகாராஸ்டிர மாநிலத்தில் உள்ள பல்ஹார் மாவட்டத்தில் உள்ள வாதாவில் இந்த அரிசி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஸினி அரிசி, ஜினி அரசி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.

வேளாண் பொருட்கள் தொடர்பாக செப்டம்பர் 29 தேதி அன்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் வாதா கோலம் அரசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த அரிக்கான சந்தை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்ஹர் மாவட்டம் வாதா தாலுகாவில் கீழ் வரும் 180 கிராமங்களில் 2,500 விவசாயிகள் வாதா கோலம் அரிசியை விளைவித்து வருகின்றனர். பல வருடங்களாகவே வாதா கோலம் அரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று அப்பிராந்திய விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

கோவில்பட்டி கடலைமிட்டாய், திண்டுகல் பூட்டு போன்று இந்தியாவில் ஒவ்வொரு பிராந்தியங்களென்று பாரம்பரியமான வேளாண் பொருட்கள் உணவுப் பொருட்கள், தயாரிப்புப் பொருட்கள் உண்டு. இத்தகைய பிராந்திய ரீதியிலான அடையாளம் பெற்ற பொருட்களுக்கு அதன் தரத்தின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் பொருட்டும் அடையாளம் காட்டும் பொருட்டும் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்