இந்தியாவிலிருந்த வந்த கோஷிஷீல்ட் தடுப்பூசியை நான் செலுத்திக் கொண்டுள்ளேன் : ஐ.நா.சபை தலைவர் அப்துல்லா ஷாகித் பேச்சு

By செய்திப்பிரிவு

நானும் இந்தியாவிலிருந்து வந்த கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டுள்ளேன் என்று ஐ.நா. சபை தலைவர் அப்துல்லா ஷாகித் கூறியுள்ளார்.

மாலத்தீவு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் அப்துல்லா ஷாகித். இவர் தற்போது ஐ.நா. சபையின் இந்த மாதத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரிட்டனின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசிகள் மாலத்தீவுகளுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 2 டோஸ்களையும் நான் செலுத்திக் கொண்டுள்ளேன்.

கோவிஷீல்ட் தடுப்பூசியை பல நாடுகள் ஏற்பார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், பெரும்பகுதி நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை வாங்கியுள்ளன. நான் பிழைத்துவிட்டேன். ஆனால், மருத்துவம் பற்றி தெரிந்தவர்கள் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவிலிருந்து 6.6 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் மாலத்தீவு நாடுகளும் ஒன்று. இந்தியாவிடமிருந்து ஆரம்பத்திலேயே தடுப்பூசிகளை மாலத்தீவு நாடு பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து அந்த நாட்டுக்கு இதுவரை 3.12 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்