ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 11 போட்டிகளில் விளையாடி உள்ளசிஎஸ்கே 9 வெற்றிகள், 2 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
வெற்றிக்குப் பின்னர் தோனி கூறும்போது, “இந்த வெற்றிக்கு அதிகமான அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் கடந்த சீசனில், முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் வெளிேயறினோம். அனைத்துப் போட்டிகளிலும் எப்போதும் உங்களால் வெல்ல முடியாது. கடந்த சீசன் நாங்கள் நினைத்தபடி அமையவில்லை. நாங்கள் செய்த தவறுக்கு எந்த காரணமும் சொல்ல வில்லை. ஆனால் இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று சொன்னதை செய்துள்ளோம்.
எங்கள் வெற்றியிலும், கடின மான காலத்திலும் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு அளிக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். வேகத்தை தொடர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர், விளையாட்டின் அனைத்து துறைகளையும் சமநிலையில் வைத்திருப் பதற்கான பொறுப்பு களை அவர்கள் எடுத் துள்ளனர். எனவே வீரர்களுக்கும் பயிற்சி யாளர்களுக்கும் இந்த வெற்றி உரியது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago