ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1.12 லட்சம் கோடியாகவும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.16 லட்சம் கோடியாகவும் இருந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1.17 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.20,578 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.26,767 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.60,911 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.8,754 கோடி மத்திய அரசுக்கு கிடைத் துள்ளது.
சராசரி ஜிஎஸ்டி வசூல் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2-ம் காலாண்டில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற் கான அறிகுறியாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago