இந்திய-அமெரிக்க உத்திசார் கூட்டுறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொலி கூட்டத்தில் அமெரிக்க தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் பேசும்போது, “மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்கள் காரணமாக உலகின் பிற நாடுகளால் எட்டமுடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். குறிப்பாக 2023-ம் நிதி ஆண்டில் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்டும். பொருளாதார சீர்திருத்தங்களின் பலனாக அடுத்த சில ஆண்டுகளில் 7 சதவீதத்துக்கும் மேலானவளர்ச்சியை இந்தியா எட்டும்.இந்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்கானது. இதில் 7 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை இந்தியா எட்டுவது உறுதி” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago