பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனால் ட்விட்டர் உள்ளிட்டர் சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்பான மீம்ஸ்கள் டிரெண்டாயின.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அம்ரீந்தர் சிங்குக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து, திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இது பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சித்து அனுப்பி உள்ளார். இந்நிலையில் சித்துவின் திடீர் ராஜினாமா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் குறித்து வெளியிடப்பட்ட மீம்ஸ்கள் டிரெண்டாயின.
சித்து, அம்ரீந்தர் சிங், அம்ரீந்தர் சிங்- பாஜக தலைவர்களை இணைத்து ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. இவை அகில இந்திய அளவில் டிரெண்டாயின.
அதேபோல் கடுமையான அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் டெல்லி செல்ல இருக்கிறார் என்றும் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, ஜேபி நட்டாவை அமரீந்தர்சிங் சந்திக்க இருக்கிறார் என்றும் இந்த சந்திப்புக்குப் பின்னர் பாஜகவில் அமரீந்தர்சிங் இணைவார் என்றும் நேற்று பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அமரீந்தர்சிங் தரப்பு மறுத்தது.
இந்த விவகாரங்கள் தொடர்பாகவும் ட்விட்டரில் வெளியான மீம்ஸ்கள் அகில இந்திய அளவில் டிரெண்டாயின.
ட்விட்டர் மட்டுமல்லாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் சித்து விவகாரம் தொடர்பான மீம்ஸ்கள் வெளியாகி டிரெண்டாயின.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago