சென்செக்ஸ் 410 புள்ளிகள் சரிவு :

By செய்திப்பிரிவு

பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் கடுமையான சரிவு தொடக்கத்தில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் பிற்பகல் 2 மணி நிலவரத்தின்போது 1,032 புள்ளிகள் வரை சரிவு ஏற்பட்டது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 279 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது.

ஆனால் வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச் சந்தை 410 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 59,667 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் 106 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 17,748 புள்ளிகளாகவும் நிலை கொண்டது.

சர்வதேச பங்குச் சந்தையில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப பங்குகள் மற்றும் நிதி நிறுவன பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன.

பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன.

பவர் கிரிட் கார்ப்பரேஷன், என்டிபிசி, சன் பார்மா, டைட்டன், கோடக் மஹிந்திரா வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின.

தேசிய பங்குச் சந்தையில் ஓபராய் ரியால்டி, இண்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட், பிரஸ்டீஸ் எஸ்டேட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. இவற்றுடன் கொபோர்ஜ், டெக் மஹிந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ இன்போடெக் ஆகிய நிறுவன பங்குகளும் சரிந்தன. நிதி நிறுவன பங்குகளில் ஹெச்டிஎப்சி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பைனான்ஸ் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்