முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் (2004-2014) மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார். பொருளாதார நிபுணரான இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், திட்டக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மன்மோகனுக்கு நேற்று 89-வது பிறந்தநாள் ஆகும்.
இதையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில், “டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அச்சமில்லாத மற்றும் நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் திறமை உடையவர் இவர். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “தொலைநோக்கு பார்வையாளரும் நாட்டுப்பற்றாளரு மான டாக்டர் மன்மோகன் சிங்அவர்களே, நாட்டின் உண்மையான தலைவர் என்ற தகுதி உங்களுக்கு உள்ளது. உங்களையும் நாட்டுக்கு ஆற்றிய உங்கள் பங்கையும் நாட்டு மக்களும் காங்கிரஸ் கட்சியும் எப்போதும் மறக்காது” என பதிவிடப்பட்டுள்ளது.இதுபோல கட்சியின் மூத்த நிர்வாகிகள் மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago