ஐபிஎல் டி 20 தொடரில் அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா மோதின. முதலில் பேட் செய்த கொல்கத்தா 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. ராகுல் திரிபாதி 45, நிதிஷ் ராணா 37, தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் விளாசினர். ஜோஸ் ஹேசல்வுட், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
172 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணியில் அதிரடியாக விளையாடி ருதுராஜ் 40 , டு பிளெஸ்ஸிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் அம்பதி ராயுடு 9, மொயின் அலி 32 ரன்களில் வெளியேறினர். கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வருண் சக்ரவர்த்தி வீசிய ஓவரில் சுரேஷ் ரெய்னா 11, தோனி 1 ரன்களில் ஆட்டமிழக்க பரபரப்பானது. பிரஷித் கிருஷ்ணா வீசிய 19-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசினார். சுனில் நரேன் வீசிய கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் சேம் கரண் (4) ஆட்டமிழந்தார்.
3-வது பந்தில் ஷர்துல் தாக்குர்3 ரன்கள் சேர்க்க ஸ்கோர் சமநிலையை எட்டியது. 5-வது பந்தில் ஜடேஜா (22) எல்பிடபிள்யூ ஆனார்.கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் தீபக் ஷகார் தூக்கி அடித்து ரன் ஓடினார். முடிவில் 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 8-வதுவெற்றியாக அமைந்தது. இதன்மூலம் 16 புள்ளிகளுடன் சென்னைஅணி முதலிடம் பிடித்தது.
இன்றைய ஆட்டம்ஹைதராபாத் - ராஜஸ்தான்
இடம்: துபாய்
நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago