செயல்படாத கட்சிகளை பதிவு நீக்கம் செய்ய ஆணையம் பரிந்துரை :

By செய்திப்பிரிவு

நாட்டில் செயல்படாமல் பெயர் அளவுக்கு மட்டுமே இருக்கும் அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்ய மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 2,796 கட்சிகள் தேர்தல்களில் முறை யாக போட்டியிடாததும், அங்கீகாரமற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற அரசியல் கட்சிகள் நன்கொடைகளை பெற்று கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும், கருப்புப் பணத்தை பதுக்கும் போலி நிறுவனங்களாக செயல்படக் கூடும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. எனவே, தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவு நீக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்