கடந்த ஜனவரியில் 50,000 புள்ளிகள் என்ற நிலையில் இருந்த சென்செக்ஸ் குறியீட்டெண் 8 மாதங்களில் 60,000 புள்ளிகளை எட்டியுள்ளது.
கரோனா பாதிப்பு தொடங்கிய கடந்த 2020 மார்ச் மாதத்தில் இறக்கத்தைச் சந்தித்த பங்குச் சந்தை அதன் பிறகு தொடர்ந்து ஏற்றத்தின் போக்கிலேயே இருந்து வருகிறது. சிறு சிறு இறக்கங்கள் கண்டாலும் புதிய வரலாற்று உச்சம் தொட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஜனவரி 21ம் தேதி சென்செக்ஸ் குறியீட்டெண் 50,000 புள்ளிகளை முதன்முறையாக எட்டியது. அதன்பிறகு எட்டே மாதங்களில் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. பங்குச் சந்தை இந்த ஆண்டில் மட்டும் கிட்டதட்ட 25 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
தற்போதுள்ள ஏற்றத்தின் போக்கு அடுத்த சில ஆண்டு களுக்குத் தொடரும் என்று ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட் நிறுவன தலைமை ஆய்வாளர் சந்தோஷ் மீனா கூறியுள்ளார்.
நேற்று வர்த்தகம் தொடங்கிய தும் சென்செக்ஸ் முதன்முறையாக 60,000 புள்ளிகளைக் கடந்தது. வர்த்தக முடிவில் 60,048.47 புள்ளிகளில் நிலைகொண்டது. நிஃப்டியும் கணிசமாக ஏற்றம் கண்டு 17,853.20 புள்ளிகளில் நிலைகொண்டது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, எஃப்ஐஐ மற்றும் உள்நாட்டு முதலீடுகள் வலுவாக அதிகரித்தபடி இருப்பதால் இத்தகைய ஏற்றம் சாத்தியமாகி யுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago