கங்குலியைப் பார்த்துதான் இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன், அவர்தான் எனது ஹீரோ என்று ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி 20 தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. தொடக்க வீரரான வெங்கடேஷ் ஐயர் 53 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 26 வயதான வெங்கடேஷ் ஐயர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ஆவார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் வெங்கடேஷ் ஐயர் கூறும்போது, “நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் கொல்கத்தா அணியில்தான் எனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால், கங்குலி என் ஹீரோ, கொல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டனாக இருந்ததால் அந்த அணிக்குச்செல்ல விரும்பினேன்.
அதேபோல கொல்கத்தா அணி என்னை ஏலத்தில் வாங்கியபோது எனக்கு கனவுபோல் இருந்தது. என்னை ஒவ்வொருவரும் வாழ்த்தினார்கள், அதிகமான பரிசுகளை அளித்தார்கள். நான் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன். உலகளவில் கங்குலிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னுடைய பேட்டிங்கை மாற்றியதிலும், மெருகேற்றியதிலும் மிகப்பெரிய பங்கு கங்குலிக்கு உண்டு.
இளம் வயதில் நான் வலது கை பேட்டிங்கே செய்தேன். ஆனால் கங்குலியின் பேட்டிங்கைப் பார்த்து இடதுகை பேட்டிங்கிற்கு மாறினேன், கங்குலி போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அவர் அடிக்கும் சிக்ஸர், பவுண்டரி போன்று அடிக்க பயிற்சி எடுத்தேன். என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு கங்குலி்க்கு உண்டு. என்னுடைய வாய்ப்புக்காக உண்மையில் காத்திருந்தேன், எனக்கு வாய்ப்பு கிைடக்கும் என எனக்குத் தெரியும்” என்றார்.
இன்றைய ஆட்டம்ராஜஸ்தான் - டெல்லி
நேரம்: பிற்பகல் 3.30
இடம்: அபுதாபி
ஹைதராபாத் - பஞ்சாப்
நேரம்: இரவு 7.30
இடம்: ஷார்ஜாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago