கர்நாடக பேரவையில் வேட்டியுடன் மல்லுக்கட்டிய சித்தராமையா : உடல் எடை கூடியதாக கூறியதால் சிரிப்பலை

By இரா.வினோத்

கர்நாடக சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசிக்கொண்டிருந்த போது வேட்டி அவிழ்ந்து கீழே இறங்கியது தெரியாமல் அவர் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கர்நாடக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மைசூருவில் நடந்த கூட்டு பாலியல்பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து பேசினார். அப்போது எதிர்பாராதவிதமாக சித்தராமையாவின் வேட்டி திடீரென அவிழ்ந்துகீழே இறங்கியது. இதை கவனிக்காமல் அவர் தொடர்ந்து ஆவேச‌மாக பேசிக் கொண்டிருந்தார்.

இதை கவனித்த காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார், வேட்டி அவிழ்ந்தது குறித்துசித்தராமையாவின் காதில் ரகசியமாக தெரிவித்தார். உடனே சித்தராமையா, 'வேட்டி அவிழ்ந்துவிட்டது' எனக்கூறி இருக்கையில் அமர்ந்து, சரி செய்தார். அதற்கு மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா, ‘நான் வேட்டி கட்டிவிடட்டுமா?' என கிண்டலாக கேட்க, அவையில் சிரிப்பலை எழுந்தது.

அதற்கு சித்தராமையா, "அய்யய்யோ பாஜகவினரின் உதவிஎனக்கு வேண்டாம். தேவைப்பட்டால் எங்கள் கட்சிக்காரர்களை அழைத்துக்கொள்கிறேன். எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு உடல் எடை 5 கிலோ கூடிவிட்டது. வயிறு பெரியதாகிவிட்டதால் இடுப்பில் வேட்டி நிற்காமல் நழுவி கொண்டிருக்கிறது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமார், “சித்தராமையாவின் வேட்டி அவிழ்ந்ததை பார்த்து கட்சியின் மானத்தைகாக்கும் வகையில் டிகே சிவக்குமார் அவர் காதில் ரகசியமாக சொன்னார். ஆனால் சித்தராமையா எல்லோருக்கும் சொல்லிவிட்டார். இனி இதை வைத்தேபாஜகவினர் எங்களை கிண்டல் செய்வார்கள். ஈஸ்வரப்பா இதற்காகவே காத்திருக்கிறார்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்