ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை அணியில் காயத்தில் இருந்து குணமடைந்த ரோஹித் சர்மா களமிறங்கினார். இதனால் அன்மோல்பிரீத் சிங் நீக்கப்பட்டார். இந்த ஆட்டத்திலும் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை.
முதலில் பேட் செய்த மும்பைஅணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி பவர்பிளேவில் 56 ரன்கள் விளாசியது. ரோஹித் சர்மா 30பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன்பந்தில் ஆட்டமிழந்தார். குவிண்டன் டி காக் 42 பந்துகளில், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் விளாசிய நிலையில் பிரஷித்கிருஷ்ணா பந்தில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் நடையை கட்டினார்.
அப்போது ஸ்கோர் 15 ஓவர்களில் 106 ஆக இருந்தது. இதன் பின்னர் இஷான் கிஷன் 14 ரன்னில் வெளியேறினார். இறுதிக்கட்ட பகுதியில் கெய்ரன் பொலார்டு15 பந்துகளில், 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களும் கிருணல் பாண்டியா 9 பந்துகளில், 1 சிக்ஸருடன் 12 ரன்களும் சேர்த்தனர். கொல்கத்தா அணி சார்பில்லூக்கி பெர்குசன், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா பேட்டிங் செய்யத் தொடங்கியது.
இன்றைய போட்டிசென்னை - பெங்களூரு
இடம்: ஷார்ஜா
நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago