‘நாட்டில் 15 கோடி பேருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை’ :

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 15 கோடி பேருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு உருவாக்கமும் தொழில் முனைவும் என்றதலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடந்தது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் 3 வயது முதல் 22 வயதுள்ளவர்களில் அரசு, தனியார் துறை, தொண்டு நிறுவனப் பள்ளிகள், அங்கன்வாடி, உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 35 கோடி பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த வயதுள்ளவர்கள் நாட்டில் 50 கோடி பேர் உள்ளனர்.

இந்தக் கணக்கின்படி ஏறக்குறைய 15 கோடி குழந்தைகள், இளைஞர்கள் அடிப்படை கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கல்வி முறைக்குள் கொண்டுவருவது அவசியமாகும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், மக்கள்தொகையில் 20% பேர் அதாவது, ஏறக்குறைய 25 கோடி மக்கள் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர். மத்திய அரசின் கல்விக் கொள்கை என்பது வெறும் ஆவணம் அல்ல. நாட்டின் 100-வது சுதந்திர தினத்துக்குள் நாம் திட்டமிட்ட இலக்குகளை அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்