இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தற்போது நாள்தோறும் 50,000முதல் 60,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ஒரே நாளில் 54,91,647 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 51,45,00,268 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இதுவரை 52.56 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களின் கையிருப்பில் 2.07 கோடிதடுப்பூசிகள் உள்ளன. விரைவில்48,43,100 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago