பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) நிதி மோசடிவழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப கடந்த பிப்ரவரி மாதம் லண்டன் வெஸ்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் நீரவ் மோடியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்படும். அவரது தற்கொலை எண்ணம் இன்னும் தீவிரமாகும் என்று நீரவ் மோடித் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், மனநலம் மற்றும் மனித உரிமையின் அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பிஎன்பியில் ரூ.14,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடி கடந்த 2018-ல் லண்டனில் தஞ்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago