இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது பெரும் புயலை கிளப்பியுள்ளது. எனினும், இவர்களின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்தவிவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்துடன் தாங்கள் எந்த பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.
பெகாசஸ் விவகாரத்தில் முதல்முறையாக மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago