கரோனா தொற்றுக்கு 12 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு? : ஆந்திர போலீஸார் தகவல்

By என். மகேஷ்குமார்

கரோனா தொற்றால் சத்தீஸ்கர்-ஆந்திர எல்லையில் பதுங்கி இருந்த 12 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் - ஆந்திரா எல்லையில் உள்ள வனப்பகுதியில் சில மாதங்களாக நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கரோனா தொற்றுக்கு ஆளாகி, அவர்களில் 12 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஆந்திரா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்ட எஸ்.பி. அபிஷேக் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்கள் அரசிடம் சரணடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என சத்தீஸ்கர், ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களான சுஜாதா, ஜெயபால், தினேஷ் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்