கரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரிப்பால் மருத்துவ ஆக்சிஜ னுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜெர்மனியில் இருந்து 23 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விமானங்கள் மூலம் கொண்டு வர பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவு செய் துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் படுக் கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கும் நாடு முழுவதும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனிடையே, அதிகரித்து வரும் கரோனா தொற்றை எதிர் கொள்ளும் விதமாக ராணுவத்தின் முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் அண்மையில் வழங்கியது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, பெருந்தொற்றின் தாக்கத்தை சமாளிப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் முதலிய வற்றை ராணுவமே வாங்கிக் கொள்ளலாம்.
அந்த வகையில், நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஜெர்மனியில் இருந்து 23 நகரும் ஆக்சிஜன் ஆலைகளை இந்தியாவுக்கு கொண்டு வர ராணுவம் முடிவு செய்துள்ளது. அடுத்த வாரத்துக்குள், இந்த ஆலைகள் விமானங்கள் மூலம் இந்தியா வந்தடையும் என ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், ஒரு ஆலையின் மூலமாக நிமிடத்திற்கு 40 லிட்டர் ஆக்சிஜனையும், ஒரு மணிநேரத்துக்கு 2,400 லிட்டர் ஆக்சிஜனையும் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago