மேற்கு வங்கத்தில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டு வருவதற்காக, 3 ராட்சத கன்டெய்னர்களை இந்திய விமானப் படை விமானம் ஏற்றிச் சென்றது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உதவ தற்போது ராணுவமும் களமிறங்கி உள்ளது. அதன்படி, ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் ஏராளமானோர் கரோனா நோயாளிகளுக்கு உதவி வருகின்றனர். தற்போது, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அதற்கு இந்திய விமானப் படையினர் உதவி வருகின்றனர்.
அதன்படி, மேற்கு வங்க மாநிலம் பனாகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டு, தேவைப்பட்ட மாநிலங்களுக்கு சப்ளை செய்வதற்காக 3 ராட்சத கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு கடந்த வியாழக்கிழமை இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் சென்றது.
இதுகுறித்து விமானப் படை அதிகாரிகள் கூறும்போது, ‘‘விமானப் படைக்கு சொந்தமான சி-17 மற்றும் 2-76 ரக கனரக விமானம் 3 காலி ராட்சத கன்டெய்னர்களுடன் மேற்கு வங்கம்சென்றது. அங்கு கன்டெய்னர்களில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டு டெல்லி உட்பட தேவைப்படும் மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படும். மேலும், லே பகுதியில் கரோனா பரிசோதனை மையம் அமைக்கும் பணியிலும் விமானப் படை ஈடுபட்டுள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago