குழந்தைகளுக்கான ராமாயணம் எழுதிய 10 வயது சிறுவன்

By செய்திப்பிரிவு

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த சிறுவன் ஆயுஷ் குமார் குந்தியா. வயது 10. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது.

அந்தக் கால கட்டத்தில், டிடி தொலைக் காட்சியில் ராமாயணம் ஒளிபரப்பானது. அதைப் பார்த்து குழந்தைகளுக்காக ‘பிலகா ராமாயணா’ (குழந்தைக்கான ராமாயணம்) என்ற தலைப்பில் 104 பக்கங்களுக்கு தனது தாய்மொழியான ஒடியா மொழியில் எழுதி முடித்துள்ளான் ஆயுஷ் குமார்.

இதுகுறித்து ஆயுஷ் குமார் கூறும்போது, ‘‘ஊரடங்கின்போது தொலைக்காட்சியில் ராமாயண தொடரை பார்க்கும்படி எனது மாமா அறிவுறுத்தினார். அதனால் ராமாயணத்தைத் தொடர்ந்து பார்த்து குழந்தைகளுக்காக சுருக்கி எழுதி உள்ளேன்’’ என்றான்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்