மியான்மர் துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி புதியஅரசு பதவியேற்பதாக இருந்தது.

அன்று அதிகாலை தேசிய ஜனநாயக லீக் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மின்ட் மற்றும் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களை ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.நாட்டில் ஓராண்டு அவசர நிலை அமல் செய்யப்பட்டு ராணுவ தலைமை தளபதி மின் ஆங் ஹேலிங் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

இதை எதிர்த்து தலைநகர் யாங்கூனில் நேற்று தேசிய ஜனநாய லீக் கட்சியை சேர்ந்தநூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக்கலைக்க போலீஸார், ராணுவவீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 18 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்