குளிர்காலம் காரணமாக எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாகவும் குளிர்காலம் முடிந்த பிறகு விலை குறைவு ஏற்படும் என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக பெட்ரோல், டீசலுக்கு வரிவிதித்துள்ளன. சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டியது. விலையைக் குறைக்கக் கோரி பல இடங்களில் போரட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குளிர்காலத்துக்குப் பிறகு விலை குறைவு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
‘கரோனாவால் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்ததால், அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தவிர, குளிர்காலம் காரணமாக தற்போது எரிபொருள் தேவை அதிகரித்து இருக்கிறது. இந்தக் காரணங்களால் சர்வதேச சந்தையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துள்ளது. இது சர்வதேச விவகாரம். குளிர்காலம் முடிந்ததும் விலை படிப்படியாக குறையும்.’ என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago