இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட்போட்டியில் இந்தியஅணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில்இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த பகலிரவு டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 6,அஸ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங்கைதொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா57, அஜிங்க்ய ரஹானே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியஅணி 53.2 ஓவர்களில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஜிங்க்ய ரஹானே 7,ரோஹித் சர்மா 66 ரன்களில் ஜேக் லீச் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்கள். ரிஷப் பந்த் 1, வாஷிங்டன் சுந்தர் 0, அக்சர் படேல் 0, ரவிச்சந்திரன் அஸ்வின் 17, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்களில் ஜோ ரூட் பந்து வீச்சில் நடையை கட்டினர். 98 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த இந்திய அணி மேற்கொண்டு 47 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களையும் தாரைவார்த்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 5, ஜேக் லீச் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அக்சர் படேல், அஸ்வினின் சுழற்பந்து வீச்சு வலையில் சிக்கியது. அக்சர் படேல்வீசிய முதல் பந்தில் ஸாக் கிராவ்லியும் (0), 3-வது பந்தில் ஜானி பேர்ஸ்டோவும் (0) போல்டானார்கள். தொடர்ந்து டாம் சிப்லி (7), கேப்டன் ஜோ ரூட் (19) ஆகியோரையும் வெளியேற்றினார் அக்சர் படேல்.
தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் (25), போப் (12), ஜோப்ரா ஆர்ச்சர் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார் அஸ்வின். இதன் பின்னர் பென் ஃபோக்ஸ் 8 ரன்னில் அக்சர் படேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஜேக் லீச்சை (9) அஸ்வினும், ஜேம்ம்ஸ் ஆண்டர்சனை (0), வாஷிங்டன் சுந்தரும் வெளியேற்ற இங்கிலாந்து அணி 30.4 ஓவர்களில் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 5, அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு கீழாக ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் 1971-ல் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
49 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள்எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 25, ஷுப்மன் கில் 15 ரன்களும் சேர்த்தனர். ஆட்டமிழக்காமல் இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய வெற்றியின் மூலம்ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது இந்திய அணி. கடைசி போட்டி இதே மைதானத்தில் வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
அஸ்வின் சாதனை...
2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜோப்ராஆர்ச்சரின் விக்கெட் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் கைப்பற்றிய 400-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த சாதனையை தனது 77-வது போட்டியில் எட்டியுள்ளார் அஸ்வின். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார் அஸ்வின்.இலங்கையின் முத்தையா முரளிதரன் 72 ஆட்டங்களில் 400 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே 85 போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது அஸ்வின் முறியடித்துள்ளார்.
ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநார்த் ஈஸ்ட் யுனைட்டெட் – கேரளா
நேரம்: இரவு 7.30
இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago