இந்தியாவுடனான வர்த்தக உறவில் சீனா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையில் 77.7 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
எல்லைப் பிரச்சினை காரணமாக சென்ற ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் முற்றியது. அதைத் தொடர்ந்து இந்திய அரசு, டிக்டாக் உட்பட பல சீனச் செயலிகளுக்கு தடைவிதித்தது. சீனத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், பல பொருட்களுக்கு சீனாவைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலே இந்தியா உள்ளது. குறிப்பாக, கனரக இயந்திரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவை இந்தியா அதிகம் சார்ந்து இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையே 77.7 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் சீனாவிலிருந்து 58.7 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா இறக்குமதி செய்த மதிப்பைவிட அதிகம்.
2019-ல் இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்கா முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2020-ம் ஆண்டில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago