கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தங்களது பணி வாய்ப்புகளை பாதிக்காது என்ற நம்பிக்கையுடன் தொழில் முறை பணியாளர்கள் வருங்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
வளர்ச்சிக்கான வாய்ப்பு மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் ஸ்திரமில்லாத சூழலிலும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என உறுதியுடன் நம்புவதாக லிங்க்ட்இன் வேலைவாய்ப்பு நம்பகத்தன்மை குறியீடு வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. இது தொடர்பான குறியீடு கடந்த டிசம்பரில் 58-வது இடத்திலிருந்தது. இது புத்தாண்டு (2021) ஜனவரியில் 54-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
கரோனா பரவலால் உருவான பொருளாதார சரிவு உள்ளிட்ட பல காரணிகள் நிலவும் சூழலில் புதிய வேலை வாய்ப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
புதிய பணிகளுக்கான தேர்வு குறித்த குறியீடு 17 சதவீதமாக சரிந்துள்ளது.
ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையான காலத்தில் 1,752 தொழில்நுட்ப பணியாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 80 சதவீதம் பேர் திறமைக்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளதாக உறுதிபட தெரிவித்துள்ளனர். இதில் 79-ம் சதவீதம் பேர் தங்களது படிப்பு, திறன் ஆகியவையே மிகுந்த பலம் பெற்றதாக திகழும் என்று தெரிவித்துள்ளனர்.
வரும் ஆண்டில் திறமை மட்டும்தான் வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் என்று குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு வயதுப் பிரிவினரும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் தீவிரம் காட்டி வருவதும் இதற்கு முக்கிய சான்றாக தெரிவித்துள்ளனர். தொழில்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட தொலைதூர நுட்பம் முக்கிய காரணியாக இருந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை, கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழில்முறை பணியாளர்கள் தங்களுக்கு வளமான எதிர்காலம் உள்ளது என உறுதியுடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago