வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் கள்ளக்கடத்தல் மூலம் வரும் தங்கத்தின் அளவு 2020 ஆண்டில் 80 சதவீதம் அளவில் குறைந்துள்ளது என்று ‘வேர்ல்ட் கோல்டு கவுன்ஸில்’ தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில், ஆண்டுக்கு 120 டன் வரையில் தங்கம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2020-ம் ஆண்டில் 20 முதல் 25 டன் அளவிலே முறைகேடான வழியில் தங்கம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டு அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டதால் முறைகேடான தங்க இறக்குமதி குறைந்துள்ளது என்று ‘வேர்ல்ட் கோல்டு கவுன்ஸில்’ கூறியுள்ளது.
விமான சேவை இன்னும் முழுமையாக தொடங்கப்படாத காரணத்தாலும், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதாலும் இந்த ஆண்டும் முறைகேடான தங்கம் இறக்குமதி குறைவாக இருக்கும் என்று அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
2021-22-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்க பிஸ்கெட் மீதான இறக்குமதி வரி 12.87 சதவீதத்திலிருந்து 10.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பானது தங்க விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் என்றும், மக்களிடையே தங்கத்தின் தேவையை அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago