பங்கு வர்த்தகத்தில் நேற்று மிகுந்த ஏற்றம் காணப்பட்டது. ஒரே நாளில் 1,030 புள்ளிகள் உயர்ந்ததில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 50,782 புள்ளிகளானது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 274 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 14,982 புள்ளிகளைத் தொட்டது.
ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ உள்ளிட்டவற்றின் பங்கு விலைகள்5.23 சதவீதம் வரை உயர்ந்தன.
நேற்று மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வர்த்தகம் தடைப்பட்ட காரணத்தால் வர்த்தக நேரம் மாலை 5 வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கு முன்பு இதேபோல கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வர்த்தகம் தடைப்பட்டது. இதேபோல 2019-ம் ஆண்டிலும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2017-ம் ஆண்டு ஐந்து மணி நேரம் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago