இலங்கை செல்வதற்காக இந்திய வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமருக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை பயணத்தின் போது இந்திய வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கைக்கு முதல்முறையாக நேற்று அரசு முறைப் பயணமாகச் சென்றார். அதற்கு இந்தியாவின் வான்வெளியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிதர வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியஅரசும் அதற்கு அனுமதி அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விதிகளின்படி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விமானம்பறக்க இந்தியா அனுமதி வழங் கியிருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய தலைவர்கள் செல்லும் விமானங்கள் சர்வதேச வான் வெளியை பயன்படுத்த அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங் கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019-ல் மத்திய அரசு ரத்து செய்தது. அப்போது காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக பாகிஸ்தான், இந்தியா மீது குற்றம் சாட்டியது. அந்த நேரத்தில் பிரதமர் மோடி, சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அரசு முறைப் பயணமாகச் சென்றார்.

அதற்கு பாகிஸ்தான் வான் வெளியைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கோரியபோது பாகிஸ்தான் அரசு அனுமதி தரவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் விமானம் பறக்க அனுமதி கோரியபோது அதற்கான அனுமதியை இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்