சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சும் காரணமாக பங்குச் சந்தை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை பாதிக்கப் பட்டுள்ளது.
இதனால் பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த இறக்கத்தினால் பதற்றமடையும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று லாபத்தை எடுத்து வருகின்றனர். இதனால் இறக்கமானது அதிகமாக உள்ளது.
வாரத்தின் முதல் நாளான நேற்று சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் சரிந்து 49,744 என்ற நிலையில் வர்த்தகமானது. நிஃப்டி 306 புள்ளிகள் சரிந்து 14,675 என்ற நிலையில் வர்த்தகமானது.
எம் அண்ட் எம், டாக்டர் ரெட்டீஸ், இண்டஸ் இந்த் வங்கி, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியப் பங்குகள் 4.61 சதவீதம் இறக்கம் கண்டன. ஓஎன்ஜிசி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை மட்டும் ஏற்றத்தில் வர்த்தகம் ஆயின.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago